Print this page

எதிர்வரும் தேர்தலில் மொட்டு கட்சிக்கு அமோக வெற்றி - பசில் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியைப் பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து எதிர்கால ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பசில் தெரிவித்துள்ளார்.