Print this page

ஜனாதிபதி கோட்டாபய வெளிநாட்டுக்குச் செல்ல தயாராவதாகத் தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் இடம்பெறும் போராட்டம் காரணமாக அவர் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தற்போது இலங்கையில் இருப்பதாகவும் அவர் வெளிநாடு செல்ல தயாராக இல்லை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகக் கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.