Print this page

சஜித் பிரதமராக புதிய அரசாங்கம்

ஜனாதிபதி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் மாற்று பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரே மாற்றுப் பிரதமராகும் என்றார்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும், தற்போதைய நெருக்கடியை நாடாளுமன்றத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நாட்டில் அராஜகம் ஏற்பட்டால், ஆப்கானிஸ்தான் சூடான், துனிசியா போன்று மாறும் என்றும் அவர் கூறினார்.