Print this page

டுபாயில் இருந்து மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரையும் குற்ற புலனாய்வு பிரிவினர் பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட 23 சந்தேக நபர்கள் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்றைய தினம் 6 பேர் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.