Print this page

ஜனாதிபதியின் புதிய அறிவிப்பை வெளியிட்டார் சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய நாளுக்குள் தனது பதவி விலகல் கடிதத்தை தனக்கு அனுப்பி வைக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகியதும் எதிர்வரும் இருபதாம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.