Print this page

நதிமல் பெரோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாதாள உலகக் கும்பல் தலைவன் என அறியப்படும் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலான் ரொமேஸ் சமரசிங்க, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட மாகந்துரே மாதூஷின் உறவுமுறை சகோதரரான நிலான் ரொமேஸ் சமரசிங்க, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அத்துடன், பாடகர் அமல் பெரேராவின் மகனான நதிமல் பெரோ, வாக்குமூலம் அளிப்பதற்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.