Print this page

8வது நிறைவேற்று ஜனாதிபதி இன்று நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.இதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர்.கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, எஞ்சியிருக்கும் வெற்றிடத்திற்கு நாட்டை ஆட்சி செய்வதற்காக  ஜனாதிபதி இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்.

இதன் காரணமாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து நுழைவு சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது