Print this page

அரகலய எதிர்ப்பாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும்

அரகலய எதிர்ப்பாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


“விஹார மகாதேவி பூங்காவை எதிர்ப்பாளர்களுக்கு வழங்குவதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார். இப்போது அமைதியான இடமாற்றத்தைத் தொடங்குவதற்கும் அவரைத் தடுத்தது எது? என்று கேள்வி எழுப்பினார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரகலய மக்கள் வீட்டுக்கு அனுப்பியதன் பின்னர், விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்