Print this page

மீண்டும் நாடு திரும்புகிறார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் பதுங்கியிருக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.