Print this page

மன்னார் பேசாலை பகுதியில் ஏராளமான கஞ்சா பறிமுதல்

மன்னார் பேசாலை பகுதியில் வைத்து 04 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் நிமன்னாராம பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கேரள கஞ்சா பொதிகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கேரள கஞ்சா கையிருப்பு இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கொண்டு வரப்பட்டு இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய பைசாலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபருடன் கேரள கஞ்சா கையிருப்பையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.