Print this page

பயங்கரவாதியை தேடி முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் நுழைந்த பொலிஸார்

முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் தலைமையகம் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது.

நுகேகொடையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை பொலிஸார் சென்றதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எந்தவிதமான தேடுதல் உத்தரவும் இன்றி வந்த இந்தக் குழு பயங்கரவாதியைத் தேடி கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பலமுறை பொலீசார் சோதனை நடத்தினர்.