Print this page

ஒன்றிணைந்த எதிரணியின் விசேடக் கூட்டம்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேடக் கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.