Print this page

டெங்கு நோய் பரவும் அபாயம்

மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோய் பரவும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13,975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் நூற்றுக்கு 40.6 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.