Print this page

மெக்சிகோவில் துப்பாக்கிசூடு – 13 பேர் பலி

மெக்சிகோவில் வேராகர்ஸ் மாகாணத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் குடும்ப விழா ஒன்றில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.