Print this page

இலங்கை மக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய வரும் சீன நிறுவனம்

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான சினோபெக் இலங்கை நாட்டில் எரிபொருளை விநியோகிக்கவும், எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யவும் மற்றும் விற்பனை செய்யவும் வர வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகளவான நிறுவனங்களை நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் எண்ணெய் விநியோகத்தில் 90% அரசாங்கத்தினாலும் எஞ்சிய 10% இந்திய எண்ணெய் நிறுவனத்தினாலும் வழங்கப்படுகின்றன.

தற்போது, ​​அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சீன நிறுவனங்கள் எண்ணெய் சேமிப்புக் கூடத்தை நிர்மாணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.