Print this page

டர்டன்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

கொள்ளுப்பிட்டியில் உள்ள டர்டன்ஸ் வைத்தியசாலையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் பல வந்துள்ளன.

தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையின் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை.