Print this page

இலங்கை அரசியலில் பிரபலமான ஆப்பத்திற்கு ஏற்பட்டுள்ள மவுசு!

ஆப்பம் மற்றும் முட்டை ஆப்பத்தின் விலை உயர்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில பிரதேசங்களில் ஒரு ஆப்பம் தற்போது 60 முதல் 65 ரூபாய் வரையிலும், முட்டை ஆப்பம் 120 முதல் 130 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

முட்டை விலை பாரிய அதிகரிப்பு மற்றும் காஸ் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த விலை உயர்வால், ஆப்பம் மற்றும் முட்டை ஆப்பத்தின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் ஆப்பம் பற்றி வெகுவாகப் பேசப்பட்டது. காரணம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக தன்னை வௌிப்படுத்துவதற்கு முதல்நாள் மாலை தங்களுடன் அமர்ந்து ஆப்பம் சாப்பிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் கூறப்பட்டது. இதனால் மைத்திரிபால சிறிசேனவை ஆப்பக்காரர் என்றெல்லாம் அழைத்தனர்.