Print this page

பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்!

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.