Print this page

மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிப்பு

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றிலும் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

இந்த சம்பவத்தினால் தேவாலயம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 300க்கும் அதிகமானவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகள் இரண்டிலும் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது