Print this page

ரட்டாவிற்கு பணம் அனுப்பிய மர்ம நபர் வசமாக மாட்டிக் கொண்டார்

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரட்டா என்ற ரதிது சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் 5 மில்லியன் ரூபாவை வரவு வைத்த நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அவர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொகை தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டமை தொடர்பில் ரதிது சேனாரத்ன பொலிஸாரிடமும் வங்கியிலும் முறைப்பாடு செய்துள்ளார்.