Print this page

இன்றும் நாட்டை ஆட்சி செய்வது மொட்டுக் கட்சி ஜனாதிபதியாம்!

மொட்டுக் கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், மொட்டு கட்சி வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரும் இன்றும் நாட்டை நிர்வகிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.