Print this page

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதும், மாணவர்கள் தொடர்ந்தும் விடுதிகளில் தங்கியிருக்க முடியும் என்றும், அவர்களுக்கான வசதிகள் வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.