Print this page

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையில், முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.