Print this page

பஸ் ரயில் போக்குவரத்து வழமைக்கு

அரச ஊழியர்கள் இன்றைய தினம் தாமதமாகவாவது பணிக்கு திரும்புமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அனைத்து அரச ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் அரச ஊழியர்களுக்கு விடுமுறை பெற்றுக்கொடுக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து இன்றைய தினம் தாமதத்துடன் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், பொதுமக்கள் வழமைக்கு திரும்ப முடியும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.