Print this page

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பாராளுமன்றத்தில்

September 06, 2022

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தமக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக சபாநாயகர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் குழு, அதன் தீர்ப்பை ஆகஸ்ட் 23 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைத்திருந்தது.