Print this page

சட்ட விரோதமாக அலரிமாளிகைக்குள் நுழைந்த மூவர் கைது!

September 07, 2022

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 35, 38 மற்றும் 44 வயதுடைய வட்டரெக்க மற்றும் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Last modified on Wednesday, 07 September 2022 04:53