Print this page

மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

September 08, 2022

தாம் உட்பட தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

இணைய சேனலில் நடந்த விவாதத்தின் போது, இனந்தெரியாத ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவையும் அவர் வெளிப்படுத்தினார்.

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசக் கூடாது எனக்கூறி அரசாங்கத்தின் பலமான ஒருவர் பாராளுமன்றத்தில் தன்னை சுவரில் சாய்ந்து கழுத்தை இறுக்கி மிரட்டியதாகவும் எம்.பி குறிப்பிடுகிறார்.