Print this page

275 கிலோகிராம் ஹெரோயினுடன் படகு மீட்பு

கிழக்கு கடற்பரப்பில் 275 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.