Print this page

ராஜபக்ஷக்கள் தலைமையில் பாதையை மாற்றி பயணத்தை சீரமைக்கிறது மொட்டுக் கட்சி

September 12, 2022

எதிர்காலத்தில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றதாகவும் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதான கட்சி என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தெடிகம பிரதேசத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனை நிர்மாணிப்பது தொடர்பில் அரசியல் குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் அதிகார தளம் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கவும், எதிர்வரும் தேர்தலை பலத்துடன் எதிர்கொள்ளவும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய கூட்டணியின் மூலம் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தை வழங்கும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.