Print this page

நாளை தேசிய துக்க தினம்

தேசிய துக்க தினமாக நாளைய தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களை அடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.