Print this page

இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்


நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் தேசிய பாதுகாப்புச் சபை கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.