Print this page

பெஸ்டியன் மாவத்தையில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து 87 டெட்டனேட்டர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ் தரிப்பிடத்தில் காணப்பட்ட 12 டெட்டனேட்டர்கள், புறக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரால் இன்று பிற்பகல் 1 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குப்பை பை ஒன்றில் இருந்து மேலும் 75 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ள.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதாகவில்லை.

Last modified on Wednesday, 11 September 2019 01:52