Print this page

யூரியா உரத்தின் விலை குறைப்பு

September 21, 2022

39,000 ரூபாவாக உள்ள 50 கிலோகிராம் யூரியா மூட்டை ஒன்றின் விலை இன்று முதல் 10,000 ரூபாவால் குறைக்கப்படும் என உர இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, யூரியா உர மூட்டை ஒன்றின் புதிய விலை 29,000 ரூபாவாகும்.

50 கிலோ கிராம் தேயிலை உர மூட்டை ஒன்றின் விலை 1,000 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.