Print this page

ஒரு கிலோ தங்க பிஸ்கட் கடத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி

September 27, 2022

20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.