Print this page

பிரபல மிளகாய் தூள் அமைச்சரின் மகனின் அடாவடி! மன்னிப்பு கேட்ட அமைச்சர்

September 28, 2022

கிரிபத்கொடையில் மேலதிக வகுப்புக்கு அருகில் வைத்து  தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மாணவர்களின் பெற்றோருக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு பொலிஸாரையும் கேட்டுக் கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல், கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்புக்கு அருகில் காரில் வந்த சிலர் மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கறுப்பு நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலீசார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி அமைச்சரின் மகனின் நண்பரின் காதலிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உட்பட ஐவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.