Print this page

இளம் தம்பதி சடலமாக மீட்பு, இரவில் நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் (சனிக்கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தம்பதி உறங்கிய அறை அதிகாலை 4 மணியளவில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.