Print this page

28 பேர் கைது

நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.