Print this page

ராஜபக்சக்களின் தவறுகளை அரச ஊழியர்கள் மீது சுமத்த வேண்டாம்

கடந்த காலங்களில் நாட்டை அழித்தது ராஜபக்சர்கள் இன்றி 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களே என தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும்,இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்தியமாக்கியது ராஜபக்சக்களே என சுட்டிக்காட்டிய பிரேமதாஸ அவர்கள்,அதற்காக அரச ஊழியர்கள் குற்றம் புரிந்தவர்களாக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

வெள்ளைப்பூண்டு,எரிவாயு,

தேங்காய் எண்ணெய்,

சீனி,நிலக்கரி போன்ற அனைத்து மோசடிகளின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,

எனவே,இதற்கு அரச ஊழியர்கள் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தடைய செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரேமதாஸ அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.

ஹபராதுவ தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் சுமணசிறி லியனகே அவர்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.