Print this page

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமனம்

பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான தீர்மானம், இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதையடுத்து ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கணக்காளர் நாயகமாக சுலந்த விக்ரமரத்னவை நியமிக்க அரசியலமைப்பு பேரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.