Print this page

காலி முகத்திடல் கடற்கரையில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நேற்று மாலை காலி முகத்திடல் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கெசல்வத்தையைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரைக் காணவில்லை என்றும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் நம்புவதாகவும் பின்னர் அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.