Print this page

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் முன்னின்று செயற்பட்ட வசந்த முதலிகேவின் உயிரை காப்பாற்ற வேண்டும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே கொல்லப்படுவார் என ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தேவுக்கு கடிதம் வந்துள்ளதாக வசந்த முதலிகேவின் சகோதரர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்த ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தே கடந்த 4ஆம் திகதி மிரட்டல் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

அநுர முதலிகே கருத்துத் தெரிவிக்கையில், “என்னை விஷம் சாப்பிட்டு சாகச் சொல்லியிருக்கிறார்கள். வன்னிலத்தேவை ஆஜராக வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

குருநாகலிலிருந்து இந்தக் கடிதம் வந்துள்ளது.