Print this page

சம்மாந்துறை வீடொன்றில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினர், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு அடையாளம் தெரியாத சிலரால் பெறப்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

Last modified on Saturday, 27 April 2019 03:47