Print this page

எதிர்வரும் மாதங்களில் எந்த தேர்தலும் இல்லை - வஜிர அபேவர்தன


தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்ன​ரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


"இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல. தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க விரும்புபவர்கள். தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் இந்த சக்திகளின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும், இதனால் அவர்கள் விரைவில் மூலையில் தள்ளப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.
எனவே அபேவர்தன வரவிருக்கும் மாதங்களில்​ே எந்த தேர்தலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.