Print this page

24 மணித்தியாலத்துக்குள் 20 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, மாவனெல்லை மற்றும் கொம்பனித்தெருவில் தலா மூன்று பேரும், மிரிஹான மற்றும் தெஹிவளையில் தலா இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொள்ளுபிட்டி, பண்டாரவளை, காத்தான்குடி, அளுத்கம, புரவசம்குளம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலு கூறியுள்ளார்.