Print this page

யால சரணாலய விடயம் குறித்து அரசியல் அழுத்தமற்ற விசாரணை நடத்த பணிப்பு

யால விலங்குகள் சரணாலய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார். 

இதன்படி அரசியல் அழுத்தம் இன்றி அந்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யால சரணாலயத்தில் பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகளை ஒதுக்கி சட்டவிரோதமாக நடந்து கொண்ட 09 பேர் இன்று (26) காலை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.

யால சரணாலயத்தில் சட்டவிரோதமாக ஓட்டிச் சென்ற 07 வாகனங்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக யால சரணாலய பிரதிப் பாதுகாவலர் தெரிவித்தார்.