Print this page

கப்ரால் பிணையில் விடுதலை, எனினும் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரான கப்ராலை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று (26) மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.