Print this page

கெப்பத்திகொல்லேவ பதற்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை!

November 01, 2022

கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின்போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நிலையில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் - கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று (31) இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.

போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ​​பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.