Print this page

ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாத் பதியுதீன் விடுதலை

November 02, 2022

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர்.