Print this page

ஹரின் பெர்னாண்டோவையும் மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று வர்ணித்த சஜித்

November 02, 2022

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அருவருப்பதாக இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச என்னையும் மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று வர்ணித்துள்ளார். தவளைகள் போல் கிணற்றுக்குள் இருந்திருந்தால், எந்த நன்மையும் ஏற்படாது.
இதன் காரணமாகவே கிணற்றில் இருந்து

வெளியில் பாய்ந்து குதிக்க தீர்மானித்தோம். நாடு ஸ்திரமின்மையை இழக்கும் விதத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என நான் சஜித் பிரேமதாசவிடம் கோருகிறேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.