Print this page

இன்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

November 03, 2022

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று (03) இணையம் வாயிலாக நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு பிரதிநிதிளும் கலந்து கொள்ளவுள்ளனர்.